பாலஸ்தீன பேரணி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ரிஷி சுனக்கிற்கு நெருக்கடி.
காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பேரணிகளை “வெறுப்பு பேரணிகள்” என்று கூறிய அவர் சிலர் வீடில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரேவ்மனியின் வேலை அந்தரத்தில் தொங்கிக் கொண்டுள்ளது.கடந்த வியாழக்கிழமை அவர் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றப் பதிவிட்டதே காரணம். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அனுமதி இல்லாமல் பாலஸ்தீன பேரணி குறித்து வெறுப்பு பேரணிகள்” என்று கூறியது குறித்து ரிஷி சுனக்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பிரேவ்மனியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.