அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு.!

அசாம் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்ற ஹிமந்த-பிஸ்வ-சர்மா பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார்.
கடந்த மாதம் 9-ஆம் தேதி, அசாம் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதில், மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. பாரதியஜனதா மட்டும் 82 தொகுதிகளை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று முன் தினம் அசாம் தலைநகர் கவுகாத்தியில் பாரதியஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் தற்போதைய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் அவர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஹிமந்த-பிஸ்வா-சர்மா, கவர்னர் லட்சுமண் பிரசாத் ஆச்சாரியாவை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதத்தை அளித்தார். கவர்னர் ஏற்றுக்கொண்டதால், ஹிமந்த-பிஸ்வா-சர்மா தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா, குவாஹாட்டியின் கானாபாரா பகுதியில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவ மைதானத்தில் நடைபெற்றது.

பிரம்மாண்டமான விழாவில், கவர்னர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிம்ந்த-பிஸ்வ-சர்மாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால், பவித்ரா மார்கரிட்டா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் பா.ஜ.க. தலைவர் நிதின்-நவீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழாவில், முதலமைச்சரின் தாயார் மிருணாலினி-தேவி, மனைவி ரினிகி-புயான்-சர்மா, மகன் நந்தில்-பிஸ்வா-சர்மா, மகள் சுகன்யா-சர்மா ஆகியோரும் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *