ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 62 ஆவது போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 62 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதில், ரியான் பராக் 51 ரன்களும், துருவ் ஜுரேல் 53 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய அபிஷேக் போரல் 51 ரன்களும், கே.எல்.ராகுல் 56 ரன்களும் எடுத்து அசத்தினர்.


