ASEAN-India Summit: பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்!

ASEAN-India Summit

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக, இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்…

20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி இன்று இரவு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகருக்கு செல்கிறார்.

இன்று இரவு டெல்லியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி, நாளை மாலையில் டெல்லி திரும்புவார். இந்த மாநாட்டில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் பங்கேற்க உள்ளன.

இதில், 10 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இந்தியா- ஆசியான் கடல்சார்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, புதிய முயற்சி உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *