Uttar Pradesh:மதரஸா பள்ளிகளை மூடும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி!

Advertisements

இஸ்லாமிய மத பள்ளிகளான மதரஸாக்களை மூடி அங்குப் பயிலும் மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மதரஸா பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இது சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையெனக் குற்றம்சாட்டி இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நடத்தும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை என்ற வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பரிந்துரைகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், உ.பி., திரிபுரா அரசுகளின் உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டனர். மேலும் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்கனவே செயல்படுத்திய உத்தரப்பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *