
அரிசி விலை உயர்வால் நியாய விலை கடைகளில் எந்த தட்டுப்பாடு இல்லை எனவும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அரிசி விலை உயர்வால் ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு இல்லை என்றும் போதிய அளவு அரிசி கையிருப்பு உள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைநகரம் தொடங்கி கிராமம் வரை கூட்டுறவு சங்கத்தின் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கூட்டுறவு துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா விவசாய கடன் வழங்கப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் 13,500 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு 16 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இரண்டரை ஆண்டு காலத்தில் 9 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.அரிசி விலை உயர்வால் நியாய விலை கடைகளில் எந்த தட்டுப்பாடு இல்லை.போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளது என்றுஅமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

