சென்னை விமான நிலையத்தில் கௌதமி காட்டம்..!

Advertisements

அம்மாவின் தயவால் முதலமைச்சர் பதிவில் அமர்ந்த ஓ. பன்னீர் செல்வம் தற்போது, திமுகவில் இணைந்து மாபெரும் துரோகத்தை அம்மாவிற்குச் செய்துள்ளார் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் அம்மாவின் தயவால் முதலமைச்சர் பதிவில் அமர்ந்த ஓ. பன்னீர் செல்வம் தற்போது, திமுகவில் இணைந்து மாபெரும் துரோகத்தை அம்மாவிற்குச் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து, தற்போது ஓபிஎஸ் பேசுவதெல்லாம் ஆணவத்தின் உச்சம் என்று தெரிவித்தார்.
பின்னர், அதிமுகவில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்றும், ஓரிருவர்கள் செல்வதால் கட்சி சிதறும் எனக் கூறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறினார். தொடர்ந்து,  அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு சென்ற ஒருவர் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி வர உள்ளார் என முன்னாள் அமைச்சர் வேலுமணி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *