ஆறுமுக நாவலர் குருபூசை விழா!

Advertisements

கடலூர்:

சிதம்பரத்தில் ஆறுமுக நாவலர் குருபூசை விழா பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது

சிதம்பரத்தில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியில் ஆறுமுக நாவலரின் 145 வது குருபூசை விழா இன்று (நவ.23) நடைபெற்றது. இதில் மூன்று வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளி குழுத் தலைவர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி குழுச் செயலாளர் டாக்டர் அருள் மொழி செல்வன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் வரவேற்பு பேசினார்.

இதில் பள்ளி மாணவர்களின் நாட்டிய நடனம், மூங்கில் நடனம், பரதம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராகத் தஞ்சாவூரை சேர்ந்த அழகப்பன் கலந்துகொண்டு பேசினார். முன்னாள் கவுன்சிலர் ராகவன், ஆன்மீக பேச்சாளர் பொன்னம்பலம், பனசை மூர்த்தி, சிவ கவரி மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *