Arulmigu Sri Pattalamman Temple: பால்குடம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு!

வாலாஜாபேட்டை புட்டாளம்மன் திருக்கோவிலில் தை மாத மயிலார் திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஓம் சக்தி.. ஓம் சக்தி.. என பக்தி மனமுருகி சிறப்பு வழிபாடு செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ புட்டாளம்மன் திருக்கோவிலில் 108-ஆம் ஆண்டு தை மாத மயிலார் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என அனைவரும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள பச்சையம்மன் திருக்கோவிலில் இருந்து பல்வேறு பூ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் வடிவிலான பூ கரகத்தை பக்தர்கள் தலையில் சுமந்து மேளதாளம் பம்பை வாத்தியம் முழங்க முக்கிய சாலையின் வழியாக அனைவரும் பால்குடத்தை தலையில் சுமந்தவாறு ஆலயத்தை வந்தடைந்தது.

பின்னர் கருவறையில் இருக்கும் புட்டாளம்மன் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்து ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம் சக்தி.. என பக்தி கோஷங்களை எழுப்பி அம்மனை மனமுருகி வழிபட்டு சென்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *