நேட்டோ நாடுகள் கோழைகள் என டிரம்ப் கடுமையாக விமர்சனம்.!

Advertisements

ஹார்முஸ் நீரிணையை திறக்க உதவாத நோட்டோ நாடுகள் கோழைகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரான் இஸ்ரேல் இடையே போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியது. இதனால், அங்கு வர்த்தக கப்பல் பாதுகாப்பாக செல்ல போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இதில், பல நாடுகள் கப்பல்கள் அனுப்பாமல் கைவிரித்து விட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, அமெரிக்காவின் கோடிக்கணக்கான டாலர்களைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு தேவைப்படும்போது அந்நாடுகள் ஒதுங்கிக்கொள்வது வழக்கமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். இப்போரில் அமெரிக்கா ராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதால் இனி தங்களுக்கு நேட்டோ நாடுகள் உதவி தேவையில்லை என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை திறக்க உதவாத நேட்டோ நாடுகள் கோழைகள் என்றும் அமெரிக்கா இல்லையென்றால், நேட்டோ வெறும் காகிதப் புலிதான் என்றும் கடுமையாக விமர்சித்தார். எண்ணெய் விலை உயர்வை பற்றிப் புகார் அளிக்கும் நேட்டோ நாடுகள், ஹார்முன் நீரிணையை திறக்க உதவ மறுக்கிறார்கள் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *