
அரக்கோணம் தெற்கு, வடக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் பழனிப்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் 35ஆவது பொதுக்குழுக் கூட்டம் தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரக்கோணம் தெற்கு, வடக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் பழனிப்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும், அரக்கோணத்தில் சதாப்தி விரைவு ரயில், போடிநாயக்கனூர் மெயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையப் பொது மேலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் தேவராஜ், ரயில் பயணிகள் சங்கப் பொதுச் செயலாளர் குணசீலன், ஏகாம்பரம், ரகு, யஸ்வந்த்ராவ், சிவசுப்ரமணி அண்ணாச்சி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


