அர்ஜுன் சம்பத் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Advertisements

கோவை: 

வார இதழ் ஆசிரியருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி மீது ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, ஓம்கார் பாலாஜி ஜாமீன் கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த முதன்மை நீதிபதி விஜயா, ஓம்கார் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *