சென்னை பெரம்பூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஆகியோர் நிவாரண பொருட்களுக்கு வழங்கினார்கள்.
சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட 74 வது வட்டத்தில் உள்ள மங்களபுரம், டாக்டர் அம்பேத்கார் நகர், அறிஞர் அண்ணா தெரு, சேமத்தம்மன் காலனி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக்சாம் புயல் மழை வெள்ளத்தால் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்
இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து தங்களது அன்றாட வாழ்க்கையை தொலைத்து மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினார்கள்.
இதனை அடுத்து சென்னை மாநகர மேயர் பிரியா பிரியா ராஜன் ஏற்பாட்டில் திருவிக நகர் பகுதி கழக துணைச் செயலாளர் பெரம்பூர் ஆர் ராஜன் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 3000 குடும்பங்களுக்கு அரிசி ,எண்ணெய், கோதுமை மாவு, பல சரக்கு பொருட்கள், போர்வை ,வேட்டி, சேலை உள்ளிட்ட மழை வெள்ள நிவாரண நலத்திட்ட உதவி பொருட்களை வழங்கினார்.
இந்த மழை நலத்திட்ட நிவாரண பொருட்களை அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வரிசையில் நின்று டோக்கன் முறையில் அமைதியாக பெற்றுச் சென்றனர்
மேலும் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான பகுதி மக்கள் கணக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கும் தொடர்ச்சியாக இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என திரு வி க நகர் பகுதி செயலாளர் ஆர் ராஜன் தெரிவித்தார்
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விரைவில் அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையான 6000 தங்கு தடை இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என சென்னை மாநகர மேயர் பிரியாராஜன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திரு வி க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி சென்னை மாநகர மேயர்
பிரியா ராஜன்.திருவிக நகர் பகுதி துணைச் செயலாளர் பெரம்பூர் ராஜன். மற்றும் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

