
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற இளைஞர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கப் பாடுபடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் இளைஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வடிவேல், மாநில சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் ஷேக் முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினர். அப்போது பேசிய வடிவேல் வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கப் பாடுபட வேண்டுமென்று கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.


