Food Safety Officers: ஆய்வு சென்ற அதிகாரியிடம் வாக்குவாதம் !

பண்ருட்டி அருகே மீன் விற்பனை சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் மீன் விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கந்தன் பாளையம் பகுதியில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மீன் விற்பனை சந்தையில் புதுச்சேரி கடலூர் நாகப்பட்டினம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திடீரென கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மருத்துவர் கைலேஷ் குமார் தலைமையில் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அஞ்சனாதேவி தலைமையிலான குழு பண்ருட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.அப்போது அதிகாரிகள் மற்றும் மீன் விற்பனையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஆய்வின்போதுகெட்டுப்போன 50கிலோ மீன் மற்றும் இறால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.மேலும் தரமற்ற மீன்களை விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது பத்தாயிரம் அபதரம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தரமற்ற மீன்களை சமைத்து உட்கொள்ளும் போது வயிற்றுப்போக்கு வாந்தி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும் என்றும் ஒரு சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படும் சூழல் நிலை உள்ளது என்றும் மீன் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் தரமற்ற மீன்கள் விற்பனை செய்தால்

மீன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது மீது கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.இந்த ஆய்வின்போதுஉணவு பாதுகாப்புதுறை குழு மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *