Rajinikanth Birthday Celebration: அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 74 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட, நகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அன்னதானம் வழங்கி, சிறப்பு பூஜைகள் செய்து பிறந்தநாளை கொண்டாடினர்.

திரை உலக சூப்பர் ஸ்டார் ஆக இன்றும் திகழ்ந்துவரும் ரஜினிகாந்த் அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் பி.ஆர்.பாபு தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், நகர் நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று ராமநாதபுரம் ராமலிங்கா அன்பு இல்லத்தில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி, ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயத்தில் ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதில் ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்  கபிலர், ராஜா, இளங்கோவன், வெள்ளைச்சாமி, சலீம், அரிசிக்கடை சரவணன் மற்றும் நகர் நிர்வாகிகள் கணேசமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, மணிகண்டன், காளிதாஸ், தம்பிதுரை, மதுரை சிவா, சிவக்குமார் உட்பட ஏராளமான ரஜினி மன்ற நிர்வாகிகள் ரசிகர் மன்ற தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *