Airbus C295: இந்திய விமானப்படைக்கு அர்பணிப்பு!

இந்திய விமானப்படைக்கு ஏர்பஸ் C-295 MW போக்குவரத்து விமானம் இன்று அர்பணிக்கப்பட்டது.

 

இந்திய விமானப்படைக்கு ஏர்பஸ் C-295 MW போக்குவரத்து விமானம் இன்று அர்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் ஏர்பஸ் C-295 MW போக்குவரத்து விமானத்தை முறையாக அறிமுகப்படுத்தினார்.

அப்போது  விழாவில் ராஜ்நாத் சிங்  ஸ்வஸ்திகா சைகை செய்து, விமானத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்கினார். இந்திய விமானப்படைக்கு ஏர்பஸ் C-295 MW போக்குவரத்து விமானம் ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல்லாக அமையும் எனப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *