சாதனை படைத்த சுனில் சேத்ரி!

பெங்களூரு:

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் பெங்களூருவில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, பெங்களூரு எப்.சி அணியுடன் மோதியது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், பெங்களூரு எப்.சி. அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஐ.எஸ்.எல். தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த வயதான வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

இதன்மூலம் ஐதராபாத் எப்.சி. அணிக்காக 38 வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த நைஜீரிய வீரர் பார்தோலோமிவ் ஓக்பெச்சேவின் சாதனையைச் சுனில் சேத்ரி முறியடித்துள்ளார்.

சுனில் சேத்ரியின் சமீபத்திய ஹாட்ரிக் ஐஎஸ்எல்லில் அவரது மூன்றாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன் 2015ல் மும்பை சிட்டி எப்.சி.க்காகவும், 2018ல் பெங்களூரு எப்.சி.க்காகவும் ஹாட்ரிக் அடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *