தான் வீட்டில் இருந்தபோது ஐடி அதிகாரிகள் சோதனை- செல்வப்பெருந்தகை.!

Advertisements

திமுக நிர்வாகி படப்பை மனோகரன் வீட்டில் தான் இருந்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கச் சந்தித்து பேசினார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று கூறினார். திமுக நிர்வாகி படப்பை மனோகரன் வீட்டில் தான் இருந்தபோது சோதனை நடந்தது என்றும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை அணைக்கச் சொல்லி தன்னை மிரட்டியதாகத் தெரிவித்தார். இது போல, அதிமுக,பாஜக கூட்டணி கட்சியின் வீடுகளில் ஐடி சோதனை நடத்தினார்களா எனக் கேள்வி எழுப்பினார். இதன் பின்னர்,  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறி ஆதாரத்தை வெளியிட்டார். இது தொடர்பாக வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என் வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *