விஜய்யை வெளுத்து வாங்கிய சி.வி.சண்முகம்..! ஏன் தெரியுமா.?

Advertisements

சி.வி.சண்முகம், ஒருவரை புகழ்ந்த அதே வாயாலே இன்னொருவரை இப்படி சொல்லலாமா.. என்ன சொன்னாங்கனு பார்ப்போம்..!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைப்பெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், அவ்வையார் குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
வாக்களித்த பின்னர் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, “வாக்குப்பதிவு நாளான இன்று வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய மௌனப் புரட்சி ஏற்பட்டுள்ளது..
வாக்காளர்கள் எழுச்சியோடு இந்த ஆட்சி அகற்றப்பட்டு , ஒரு மாற்றம் வேண்டும் மக்கள் நினைக்கிறது அவங்க முகத்தில் தெளிவா தெரிகிறது சொல்லியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகால திராவிட மக்கள் விரோத அரசு, மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும்.
ஏழைகளின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய, மக்கள் மீது கவனம் செலுத்தக் கூடிய ஜெயலலிதா ஆட்சியை, எம்.ஜி.ஆர். பாணியில் தரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுச்சியாக எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய உள்ளது.
இரட்டை இலை சின்னம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்” எனத் உறுதிபட தெரிவித்தார்.மேலும், நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியில் குடுத்து இருக்கிறார், அதில் “எனது மகனை தமிழ்நாட்டுக்குத் தத்துக் கொடுத்துவிட்டேன்” என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த சி.வி.சண்முகம், “பிள்ளையை வளர்ப்பதற்குக் கூட துப்பில்லை” எனக் கடுமையாக விமர்சித்தபடி அங்கிருந்து நழுவி சென்றார். இது விஜயின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பிருக்கு..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *