ஓட்டுப் போடச் செல்லாத செந்தில் பாலாஜி..! எனக்கு கோவை தான் முக்கியம்..!

Advertisements

தமிழகத்தைப் பொருத்தவரை எல்லா தேர்தல்களிலும் மேற்கு மண்டலம்  சூடாகவே இருக்கும். இந்த முறை ரொம்பவே கொதிச்சு போனது. காரணம், திமுகவின் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டதால் தான்  என்கின்றனர்.

கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் கோவை மாவட்டத்தில் இருக்கிற அனைத்துத்  தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. அதனால் இந்தமுறை எப்படியாவது கோவை மண்டலத்தில் இருக்கும் 10 தொகுதிகளையும்  திமுகவின் உள்ளங்கையில் விழவைத்துக் காட்டுகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடத்தில் செந்தில் பாலாஜி உறுதியளித்திருக்கிறார்.

அந்த இலக்கை எட்டிப் பிடிக்கவே செந்தில்பாலாஜி மேற்கு மண்டல திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு மும்முரமாக கடுமையாக பணியாற்றினார்.

ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் பாஜகவின் அண்ணாமலை அதிகார மையங்களாக இருந்து கோவை மண்டலத்தையே கொதி கொதிக்க வைச்சுருக்காங்க….

மேலும், இதுவரை கரூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த செந்தில்பாலாஜி, முதன்முறையாக கோவை தெற்கு  தொகுதியில் போட்டி என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அரசியல் களம் அதிரத் தொடங்கியது. செந்தில் பாலாஜியின் பீஸை பிடுங்குகிறேன் பார் என்று அண்ணாமலை வெளிப்படையாக சாவால் விடுத்தார்.

அதேநேரம், அதிமுக அதிகார மையங்கள் எதையும் வெளிப்படையாக சொல்லாமல் செந்தில் பாலாஜிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். நேற்று நடந்த தேர்தலில் திமுகவின் செந்தில் பாலாஜி, அதிமுகவின் வேலுமணி ஆகியோர் இடையே அதிகார போட்டி உச்சக்கட்டத்தை எட்டியது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் பல இடங்களில் போராட்டத்தில் இறங்கினார்கள். அவர் சராசரியாக ஒரு வாக்குக்கு 5 ஆயிரம் ரூபாய் பட்டுவாடா செய்வதாக கூறி அதிமுகவினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகாரும் கொடுத்தாங்க.

அதனால், கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.   இதனால்  கோவைக் களம் பெரும் பதற்றத்தோடு இருந்தது.

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது தொகுதியில் ஓட்டுப் போடவில்லை என்று தகவல் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் தினமான நேத்து தனது சொந்த தொகுதியான கரூரில் ஓட்டுப் போட்டுட்டு கோவைக்கு வந்து விடுவார் என்று திமுகவினர் சொன்னார்கள். ஆனால் அவர்  ஓட்டுப் போட கரூருக்கே போகாமல் கோவையிலேயே இருந்துள்ளார். இதற்கான காரணம் தான் ஹைலைட்.

இதுதொடர்பாக திமுக நிர்வாகிகள் என்ன சொல்றாங்கன்னா “கோவை தெற்கு தொகுதியில் அதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் கடந்த சில நாட்களாக பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்குப்பதிவு நாளிலும் அவர்கள் இங்கு பிரச்சனை செய்ய திட்டமிட்டனர்.

அதை சமாளிப்பதற்காக தான் செந்தில் பாலாஜி கோவையிலேயே இருந்துவிட்டார். மேலும் அவர் வெளியூர் வேட்பாளர் என்கிற விமர்சனத்தையும் அதிமுகவினர் கிளப்பி விட்டனர். அதை தகர்க்கும் வகையில் தேர்தலின்போது கரூருக்குப் போய் ஓட்டுப் போடவில்லை  என்கின்றனர்.

தமிழ்நாட்டு தேர்தல் முடிவைப் பொருத்தவரை தேசிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் வார் என்று ரொம்ப வெளிப்படையாக திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.

ஒன்றிய பாஜக அரசும் தமிழ்நாட்டில் எப்படியாவது..எந்த ரூபாத்திலாவது கால் பதித்து ஆட்சியை  பிடித்தவேண்டும் என்ற திட்டத்தோடு பல்வேறு யுத்திகளோடு செயல்பட்டு வருகிறது.  கோவை மண்டலம் யாருக்குக் கிடைக்கும் என்பதும் கூட இதைத் தீர்மாணிக்கும் சக்திதான் என்று சொல்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *