Meghamalai Issues : உயர்மட்டக் குழு அமைக்க அண்ணாமலை கோரிக்கை.!

Advertisements

மேகமலை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பட்டா வைத்துள்ள விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், வனநிலம், பட்டா நிலம், குடியிருப்பு மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை முறையாக மறுஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் பறிக்காமல், மாற்றுக் குடியிருப்பு, மாற்று வாழ்வாதாரம் மற்றும் உரிய கால அவகாசத்துடன் மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *