“தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறி” – அண்ணாமலை அதிரடி விமர்சனம்!

தவெக அரசு வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டிச் செயல்படாமல் இருக்கக் கூடாது என நாம் தலைவர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாம் தலைவர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத் தளப் பக்கத்தில், தமிழக அரசின் வெள்ளை அறிக்கை குறித்துப்  பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் வேலை செய்யும் வயதுடைய மக்கள் தொகை, வரும் 2031 ஆம் ஆண்டில் இருந்து குறையத் தொடங்கும் சூழலில், குறுகிய காலத்தில் சீர்செய்வது மிகவும் கவலைக்கிடமான விசயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையைக் காரணம் காட்டிச் செயல்படாமல் இருக்கக் கூடாது என்றும், இந்தப் பாதிப்புகளைச் சரிசெய்து உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர்கள் தொழில், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆலோசனைக் குழுவை அமைத்துத் தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *