“இந்தியா – இலங்கை நட்பு வலுப்படும்” – இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம் நம்பிக்கை!

தமிழகத்தில் நடைபெறும் புதிய ஆட்சியின் மூலம், இலங்கை – இந்தியா இடையிலான நட்பு வலுப்பெறும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நண்பர் ஷாஜகானுக்கு வாழ்த்துத் தெரிவிக்க தமிழகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தப் புதிய ஆட்சியின் மூலம், இலங்கை – இந்தியா இடையிலான நட்பு வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார். மாற்று வழி மூலம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தப் பல உத்திகள் குறித்துப் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினையைச் சட்டரீதியாக மட்டுமே அணுக முடியாது என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார். கச்சத்தீவு தீர்மானம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் ஐ.நா.வில் தான் அதுகுறித்துப் பேசி, முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும், இரு நாடுகளும் அமர்ந்து பேசினால் தான் தீர்வு காண முடியும் என்றும் ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *