
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் தொடங்கியதில் இருந்தே, எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விலை உயர்வினால், டெல்லியில் 14.2 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை 913 ரூபாயில் இருந்து 942 ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்த விலை மாற்றம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 29 ரூபாய் உயர்ந்து, 928 ரூபாய் 50 பைசாவில் இருந்து 957 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மொத்தம் 89 ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


