Congress Protest: மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைக் கருப்பு பலூன் பறக்கவிடும் காங்கிரசார்!

Advertisements

நாளைக் கன்னியாகுமரி வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோப்பேக் மோடி என்னும் கருப்பு பலூன் பறக்கவிடபடும் எனக் காங்கிரசார் தெரிவித்தனர்

பாஜக எம்பி ஆனந்த்குமார் ஹெக்டேர், பாஜக ஆட்சி அமைந்தால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றி அமைப்போம் என்று பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் மாநகர எஸ்சி/எஸ்டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர்.

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஹேக்டேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசுகின்றபோது வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 பாஜக எம்பிகள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சஅமைப்புச் சட்டத்தைட்டத்தை மாற்றி அமைப்பதாகத் தெரிவித்துள்ளார், இது வன்மத்தை தூண்டும் வகையிலும் அம்பேத்கர் தோற்றுவித்த சட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியிருந்தார்.

இவரது பேச்சிக்கு கண்டனம் தெரிவித்தும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு காங்கிரஸ் மாநகர எஸ்பிஎஸ்டி பிரிவுத் தலைவர்.மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் நாளைக் கன்னியாகுமரி வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோப்பேக் மோடி என்னும் கருப்பு பலூன் பறக்கவிடபடும் எனக் காங்கிரசார் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *