
தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:சென்னை வானகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை, தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
* சுவையான மாம்பழம் இருக்கும் மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்.
* தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொலை, கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது.
* நேற்று தேசிய கட்சியின் மாநிலத்தலைவரை அவரது வீட்டு வாசலில் வைத்துக் கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
* தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது ஆறுபோல ஓடிக் கொண்டிருக்கிறது.
* தமிழகத்தில் சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்று கூறினார்.


