puducherry:ஜான்குமார் எம்எல்ஏவின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் தங்க தேர் இழுத்து வழிபாடு!

Advertisements

முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் எம்எல்ஏவின் பிறந்தநாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நடைபெற்ற அன்னதான விழாவை அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்ற செயலாளரும் காமராஜர் நகர் தொகுதி பாஜக எம்எல்ஏவுமான ஜான் குமாரின் பிறந்த நாளை ஒட்டிப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை மணக்குள விநாயகர் ஆலயத்தில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 45 அடி சாலையில் உள்ள ஜான் குமார் எம்எல்ஏவின் அலுவலகத்தில் கேக் வெட்டி வெகுவிமர்சியாகக் கொண்டாடப்பட்டது. நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் தலைமை தாங்கி இந்த அன்னதான விழாவைத் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொழிலதிபர் விஜயராஜ் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் காமராஜர் நகர் தொகுதி தலைவர் கார்த்திகேயன் ,மற்றும் சாரம் பொறுப்பாளர் சைஸ் கார்ட் ரவி செந்தில்குமரன் சுகுமாரன் அருள் பாபு சாமிநாதன் மற்றும் அலுவலக ஊழியர்கள் சரவணன் கார்த்திக் மோகன் சேட்டா மற்றும் ஜான்குமார் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *