தேசிய குத்துச்சண்டை போட்டியில் தெற்கு ரயில்வே அணி இரண்டாம் இடம்.!

Advertisements

தேசிய குத்துச்சண்டை போட்டியில் தெற்கு ரயில்வே  அணி இரண்டாம் இடத்தைப்  பெற்றது.

அஸ்ஸாமின் மாலிகானில் அக்டோபர் 24 முதல் 27 வரை நடைபெற்ற 79வது ஆண்கள் மற்றும் 18வது பெண்கள் அகில இந்திய ரயில்வே குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், 2025 போட்டியில், தெற்கு ரயில்வே அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

வடக்கு ரயில்வே அணி இப்போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தது. தெற்கு ரயில்வேயில் இருந்து பங்கேற்ற ஒரே பெண் குத்துச்சண்டை வீராங்கனையான தமன்னா 75 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், ‘மிகவும் நம்பிக்கைக்குரிய குத்துச்சண்டை வீராங்கனை’ என்ற சான்றிதழையும் பெற்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சரியான விளையாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாலும், சமீபத்தில் எட்டு  தெற்கு ரயில்வேயின் விளையாட்டு  வீரர்கள் புதிதாகப் பணியமர்த்தப்பட்டதாலும் அணி சிறப்பாகச் செயல்பட்டு மூன்றாம் இடத்தில் இருந்து இந்த ஆண்டு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெற்கு ரயில்வேயின் விளையாட்டு அதிகாரி தேவராஜன் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *