அரசியலை விட்டு விலகுகிறேன் : ராமதாஸ் இனி எல்லாம் அன்புமணிதான்..!

அப்பாவும் நீயே அம்மாவும் நீயே என்ற வரிகளுக்குகேற்ப பாமக தலைவர் அன்புமணியும். அன்பே என் தெய்வம் நீதானே. என் நெஞ்சில் வாழும் காவியமே. என்ற வரிகளுக்குகேற்ப பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பாமகவிலிருந்து விலகி  ஓய்வு பெறு எடுத்திருக்கும் இத்தைய  முடிவுப்  பற்றி நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் விரிவாகப் பார்க்கலாம்.

என் வாழ்க்கை என்னும் தீபமே. உன்னைக் காணும் வரையில். கண்ணில் நீரைக் கண்டேன்.  உன்னைக் கண்ட பின்னாலே.  கண்ணீர் மாறிப் போனதே வரிகளுக்குகேற்ப  அப்பன் ராமதாசும், மகன் அன்புமணியும் நடத்தியப் சண்டை எனும்  பாசப் போராட்டத்தில் ஒருவரக்கொருவர் கண்ணீர் விட்டு இன்று அரசியலில் இருந்து விலகுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நான் இதுவரை கட்டிக்காத்த பாமகவை இனி என் அன்பு மகன் அன்புமணி பார்த்துக்கொள்வார். மக்களுக்காக ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த எனது குரல் இனி அரசியல் மூலம் ஒலிக்காது.  அரசியலிலே இனி தலையிட மாட்டேன் என்று தனக்கு எதுக்கு வெட்டி வீராட்பு என்று தன் மகனுக்கு அரசியலில் வழியை விட்டு  ராமதாஸ்  ஓய்வை அறிவித்துள்ளார்.

இனிப்பூட்டும் வகையில் தனது 88 வது பிறந்தநாளை ராமதாஸ் கொண்டாடுவது அவர்  தொண்டர்களிடையே மகிழ்ச்சியுட்டும் வகையில் இருப்பினும், அசிர்ச்சியூட்டும் வகையில் ராமதாஸ், அரசியல் துறவறம் மேற்கொள்வதாக தெரிவித்திருப்பது வேதனை அளிப்பதாக அவரது  தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை ஒட்டி அவரை தைலாபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்த அன்புமணி, தன்னை வளர்த்து அரசியலில் உயர்ந்த நிலைக்கு தன்னை ஆளாக்கிய தன் தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

பாமகவில் எலியும் பூனையுமாக இருந்த அன்புமணி மற்றும் ராமதாஸ் அவர்களுக்கு ஏற்பட்ட  கருத்து வேறுபாடு பிரச்சணை சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இனி அரசியல் பேசமாட்டேன் எனவும், அரசியலில் தலையிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும், அரசியலை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த 2024 ஆம் ஆண்டு கருத்து வேற்பாடு  இருவருக்கும் அடிதடி என்று போகாத குறையாக இருந்து வந்தது. அந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கூட்டத்தில், பாமகவின் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ்க்கும், அன்புமணிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், இருவரும் தனித்தனியே நிர்வாகிகளை அறிவித்தனர்.

பாமகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அன்புமணி தரப்பு பயன்படுத்தக்கூடாது என ராமதாஸ் அறிவித்தார். தேர்தல் ஆணையம் வரை இந்த பஞ்சாயத்து சென்ற நிலையில், அன்புமணிக்கே பாமக கொடி, சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.

சட்டமன்ற தேர்தலில் சசிகலா கட்சியுடன் கூட்டணி அமைத்த ராமதாஸ் வட மாவட்டங்களில் பாமக செல்வாக்காக உள்ள தொகுதிகளில் வேட்பாளரையும் நிறுத்தினார். தந்தை மகன் இடையே ஏற்பட்ட பிளவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருந்தது. சட்டமன்ற தேர்தலில் பாமக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில், பாமகவிலும் தந்தை மகன் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. தந்தையின் 61-வது திருமண நாள் விழாவில் அன்புமணி பங்கேற்றார். அப்போது ராமதாசும் அன்புமணியும் பரஸ்பரம் ஆரத்தழுவி கண்கலங்கினர்.

இதன் தொடர்ச்சியாக ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கையும் ராமதாஸ் வாபஸ் பெற்றார். இந்த நிலையில், ராமதாஸ் பிறந்த நாள் விழாவில் அன்புமணி பங்கேற்றார். திண்டிவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அப்போது பேசிய ராமதாஸ், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இனி அரசியல் பேசமாட்டேன்.. அரசியலில் தலையிட மாட்டேன்.. யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம். அரசியலை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்.. அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என்று கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்தை மென்ட்ல் தெரிவிக்கவும்.

பாமக எனும் அன்புக் கோயில் கட்டி உன்னை அதில் வைத்தேனே.  ஆயுள் உள்ள வரைக்கும் உன்னைத்தானே பாடுவேன் என்ற கருத்தை குளிர்ச்சியூட்டும் விதமாக அன்புமணிக்கு,  பாமக நிறுவனர் அளித்திருப்தால் அவரது தொண்டர்கள் அதிர்ப்தி இருக்கையில் அவரது நிர்வாகிகள் எந்த கட்சிக்கு தாவுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *