நாடி வருவோரின் வினைகளைத் தீர்த்து அருளிடப் பிரார்த்திக்கிறேன் – எல். முருகன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய இணை மந்திரி எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்நன்னாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை மனமுருகி வழிபடுவோம்.

நாடி வருவோரின் வினைகள் தீர்த்து, தடைகளை நீக்கி, அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை விநாயகப் பெருமான் அருளிட பிரார்த்திக்கிறேன்.

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *