அமெரிக்காவில் கீழே விழுந்து வெடித்துச் சிதறிய ஜெட் விமானம்!

Advertisements

அமெரிக்காவில் விமானப்படை ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்களாகியுள்ளது.

நேற்று (ஜனவரி 28) மதியம் அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35 Lightning II போர் விமானம் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயிற்சியின்போது தரையிறங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்ததாக எய்ல்சன் விமானப்படை அறிக்கை கூறுகிறது.

இதனால் விமானம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும், பாசெட் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

F-35 ஒரே நேரத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பறக்கும் திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *