விநாயகர் அருளால் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் திரளாக பங்கேற்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள பதிவில்,

விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *