பியூட்டி பார்லருக்குள் விநோத சத்தம்!

Advertisements

சென்னை:

சென்னை அமைந்தகரை பியூட்டி பார்லரை திறக்க வந்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். இதையடுத்து, போலீசாருக்கு உடனடி தகவல் தரப்பட்டதையடுத்து, விசாரணையும், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்ன நடந்தது?

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் பிரபலமான “கிரீன் டிரெண்ட்ஸ்” என்ற பிரபல தனியார் பியூட்டி பார்லர் இயங்கி வருகிறது. இங்கு, சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஊழியர்கள் பணிமுடிந்து, பியூட்டி பார்லரையும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்கள்.

மொட்டை மாடி:

பிறகு நேற்று காலை ஊழியர்கள் பார்லரை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. கடைக்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து பியூட்டி பார்லர் மேனேஜர், உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சோதனை செய்தார்கள். அப்போது மாடியிலிருந்து வினோத சத்தம் வந்துள்ளது. பிறகுதான் அது குறட்டை சத்தம்போல இருப்பதாக நினைத்து, போலீசார் மாடிக்கு ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.

குறட்டை சத்தம்:

அப்போது மது போதையில் ஒருவர், மது பாட்டில்களுடன் ‘ஹாயாக’ குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருந்தார். இதனால், போலீசார் அவரைத் தட்டி எழுப்பி உட்கார வைத்து விசாரித்தனர்.

அப்போதுதான் அந்நபர் ஆந்திராவைச் சேர்ந்த கிஷோர் (24) என்பது தெரியவந்தது. இந்தப் பியூட்டி பார்லரின் நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட வந்தாராம். ஆனால் பணம், பொருட்கள் எதுவும் கிடைக்காமல் அப்செட் ஆகிவிட்டாராம்.

மொட்டை மாடி:

மதுபோதை அதிகமாக இருந்ததால், மாடியில் சரக்கடித்துவிட்டு கிளம்பி போகலாம் என்று நினைத்தாராம்… ஆனால் தன்னை மறந்து தூங்கிவிட்டதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், வேறு ஏதாவது கடைகளில் திருடியுள்ளாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருட வந்த இடத்தில் மதுபோதையில் குறட்டை விட்டுத் தூங்கிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் நுங்கம்பாக்கத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

 

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *