Andhra Pradesh Accident: 6 பேர் பலி!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராய நாகேஸ்வரராவ் மற்றும் ராய வெங்கடேஸ்வர ராவ். இவர்கள் குண்டூரில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் பிரகாசம் மாவட்டம், கொமரோலுவிற்கு ஒரு விசேஷத்திற்கு சென்றுள்ளனர். காரில் சென்ற அவர்கள் விசேஷம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காரில் வந்து கொண்டிருந்த போது பிரகாசம் மாவட்டம், அனந்தபூர்-அமராவதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது குந்தாவில் இருந்து மார்க்கபுரம் நோக்கி 8 பயணிகளுடன் ஆட்டோ ஒன்று வந்தது.

ஆட்டோவை மார்க்கபுரம் பி.எஸ். காலனியை சேர்ந்த ஷேக் அபித் உசேன் (46) என்பவர் ஒட்டி வந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை மீறி எதிர்ப்புறத்தில் வந்த ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது.

பலமாக  தாக்கியதால் ஆட்டோ சுமார் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. காரின் இடிபாடுகளில் சிக்கி நாகேஸ்வரராவ், ராய வெங்கடேஸ்வரா, ஆட்டோ டிரைவர் ஷேக் அபித் உசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவற்றில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா (12), டேனியல் (45) ரத்னாதேவி (9) ஆகியோர் இறந்தனர்.

ஆட்டோவில் வேளாண் கல்லூரி 3 மாணவிகள் பயணம் செய்தனர். அவர்கள் படுகாயத்துடன் மார்க்கபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *