“உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன்” – கமல் உருக்கம்!

நடிகர் ரோபோ ஷங்கருக்கு சில நாட்களுக்கு முன் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார். பின்னர் உடல்நலம் தேறி மீண்டும் சினிமாவில் ஆக்டிவாக நடித்து வந்தார். இதனிடையே நடிகர் ரோபோ சங்கருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அவருக்கு வயது 46. அவரது இறப்பு திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது குடும்பத்திற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.ரோபோ சங்கர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கற்பா வெளியிட்டுள்ளார்.

அதில், ரோபோ புனைப்பெயர் தான் ஆனால், தன் அகராதியில் அவர் மனிதன் என்றும் ஆதலால் தன் தம்பி என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “போதலால் மட்டும் என்னை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *