இரசாயன வாயு கசிந்த தொழிற்சாலையை உடனடியாக மூட வலியுறுத்தல்..!

Advertisements

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இரசாயன வாயு கசிந்த தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் வேதி வாயு கசிந்ததில் எண்பதுக்கு மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு இதே ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். அப்போதே இந்த ஆலையை அரசு மூடியிருக்க வேண்டிய நிலையில், கடலூர் மாவட்ட அமைச்சர் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆலையைக் காப்பாற்றியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கக் கூடாது என்றும், உடனடியாக  கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *