Vellore Vehicle Rescued: ஒரே நாளில் 29 வாகனங்கள் மீட்பு!

ஒரே நாளில் குடியாத்தம் பகுதியில் திருடுபோன 29 இருசக்கர வாகனங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர  வாகனத்தில் வந்த மூன்று பேரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குபிண்ணாகப் பதிலளித்துள்ளனர்.

இதனையடுத்து மூன்று பேரையும் குடியாத்தம் நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் எர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (27) ரமேஷ்(26) குமார் (27)என்பது விசாரணையில் தெரிய வந்தது.மேலும் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில்  ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 29 இருசக்கர வாகனங்களைக் குடியாத்தம் நகர போலீசார் பறிமுதல் செய்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *