
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாகச் சென்னை மாநக காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரு தேசிய கட்சி தலைவருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகத் திமுக அரசை விமர்சிக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போலச் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவைத் தமிழக உள்துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

