Anbil Mahesh Poyyamozhi: பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் இல்லை!

Advertisements

பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லையெனப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா வங்கி புத்தகம் வெளியீட்டு விழா மற்றும் இரண்டாம் படி சான்றிதழ் இணையதளம் சேவையைச் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகலம் கூட்ட அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் சிந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான மாதிரி வினாத்தாள் தொகுப்புப் புத்தகங்கள் இன்று முதல் அனைத்து மாவட்ட விற்பனை மையங்களும் கிடைக்கும் எனக் கூறினார்.

மேலும் அரையாண்டு தேர்வுகுறித்த கேள்விக்குப் பதில் அளித்த பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரலாறு  காணாத மழை பெய்துள்ளதால் நான்கு மாவட்டங்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளதாகவும்.

குறிப்பாக நான்கு மாவட்டங்களில் உள்ள எத்தனை பள்ளி பாதிப்பு அடைந்துள்ளது எத்தனை பள்ளி மாணவ மாணவிகள் பாட புத்தகங்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது  கணக்கீடு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார் விரைவில் மாணவ மாணவிகளுக்குப் பாட புத்தங்கள் கொடுக்கபடும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

பொது தேர்வு தேதியில் எந்த மாற்றம் இல்லை அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *