
பெண்களின் வாக்குகளை நம்பியே வரும் சட்டமன்றத் தேர்தல் உள்ளது என அமைச்சர் அன்பரசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் பெண் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன் பேசியபோது, திமுக பூத் ஏஜென்ட்களுடன் முதல் கட்டமாக ஆலோசனை நடத்துங்கள் என்றார்.
அடுத்த மாதம் 8 ம் தேதிக்குள், வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரையை முடிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களின் வாக்குகளை நம்பியே வரும் சட்டமன்றத் தேர்தல் உள்ளதாக உருக்கமாக தெரிவித்தார். பெண்களின் வாக்குகள் தான் பெரிய பலம் அதனை திமுக உணர்ந்துள்ளது என்றார். நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.




