தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட் கொடுத்தது – வானிலை மையம்!

Advertisements

சென்னை: 

தமிழகத்திற்கு வரும் நவம்பர் 30ம் தேதி ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்று 20 செ.மீ., மேல் மழை பொழியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் உள்ளது. ‘பெங்கல்’ புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நவ.,30ம் தேதி காலைக் கரையை கடக்கும். இந்நிலையில், தமிழகத்திற்கு வரும் நவம்பர் 30ம் தேதி ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அன்று 20 செ.மீ., மேல் மழை பொழியும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29, 30ம் தேதிகளில் தமிழக வட மாவட்டங்களில் மிகக் கனமழையும், கடலோர மாவட்டங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *