தெரு நாய் கடித்தததில் சிறுவன் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

Advertisements

ஓமலூரில் தெரு நாய் கடித்தததில் சிறுவன் உட்பட 2 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் ஓமலூரை சேர்ந்த இளவரசன் ரூபி தம்பதியின் 4 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தபோது தெருநாய் ஒன்று அச்சிறுவனை கடித்து குதறியது.

இதை பார்த்த சிறுவனின் பாட்டி நாயை விரட்டி ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதேபோல், தாரமங்கலம் பகுதியை சேர்ந்த நபர், நெசவு வேலைக்கு சென்றபோது, தெருநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்துள்ளது.

ஓமலூர்,தாரமங்கலம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *