
Actress Amritha Aiyer : சென்னையில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்து, மலையாள மொழி திரைப்படங்கள்மூலம் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கிய நடிகை தான் அம்ரிதா, அவருக்கு வயது 30.
சென்னையில் கடந்த 1994ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி பிறந்த அம்ரிதா, பெங்களூரில் உள்ள சென் ஜோசப் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய நடிகை அமிர்தா, கடத்த 2014ம் ஆண்டு தமிழில் வெளியான வைகைப்புயல் வடிவேலுவின் “தெனாலிராமன்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தைத் தொடங்கினார்.
தொடர்ச்சியாகத் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ள அம்ரிதா, தளபதி விஜயின் “பிகில்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாகத் தமிழில் “காபி வித் காதல்” திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்திருந்தார்.
அவ்வப்பொழுது தெலுங்கு திரையுலகிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அமிர்தா, குறும்படங்களிலும் நாயகியாக நடித்திருக்கின்றார்.

