மகா காளியம்மனுக்கு மகா தீபாராதனை..!

ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில்  சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூரில் அமைந்திருக்கும் 300 ஆண்டுகள் பழமையான மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் .

இந்நிலையில் ,  மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன்  துவங்கிய  5 கட்ட  யாகசால பூஜைகள் நிறைவு பெற்று கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத 108 புண்ணிய  தீர்த்த தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தெளிக்கபட்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டு  அடுத்ததாக மூலவர் மகாகாளியம்மனுக்கு மகா தீபாராதனை  காட்டப்பட்டது.

இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கண்டமனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கண்டமனூர் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *