ராகுல் காந்திக்கு துணிவிருக்கா?

Advertisements

ராகுல் காந்திக்கு துணிவிருந்தால், ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது குறித்துத் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் காம்ரூப் பகுதியில் காவல்துறை பட்டாலியன் புதிய வளாகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா அடிக்கல் நாடினார். இந்நிகழ்வில் பேசிய அவர், “மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டில் இருந்து நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மட்டுமல்ல, 2031 ஆம் ஆண்டுக்குள் அவர்களை நாட்டை விட்டே விரட்டுவோம் என்றும்  கூறினார்.

ஊடுருவல்காரர்கள்  நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேற்றுவதே ஓரே தீர்வு என்றார். காங்கிரஸ் கட்சிக்கு ஊடுருவல்காரர்களே வாக்கு வங்கி என்பதால், அவர்களை வெளியேற்ற காங்கிரஸ் ஒருபோதும் முன்வராது என்று குற்றம் சாட்டினார். ராகுல் காந்திக்கு துணிவிருந்தால், ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது குறித்துத் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *