திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்..!

Advertisements
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திடீரென பல்டி அடித்து தமிழக வெற்றி கழகத்துடன் இணையும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பெரிதும் நம்பி இருக்கும் மு க ஸ்டாலின் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
திமுக கூட்டணியை பொறுத்தவரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முக்கிய அங்கம் வகித்து வருகிறது காரணம் தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களின் நம்பிக்கைக்குறிய தலைவராக தொல் திருமாவளவன் கருதப்படுகிறார்  கிட்டத்தட்ட 65 சதவீத தலித் இன மக்கள் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் இயங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் கூட்டணி நிலைப்பாடு மட்டுமல்லாமல் மு க ஸ்டாலினும் தொல் திருமாவளவனாலும் நல்ல நட்புடன் இருந்து வருகின்றனர்.அந்த வகையில் கடந்த தேர்தல் சமயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இதில் நான்கு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது.
தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் பொருத்தமட்டில் தங்களுக்கு 12 தொகுதிகள் வேண்டும் எனவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு  வேண்டும் எனவும் தொல் திருமாவளவன் கோரிக்கை வைத்து வருகிறார்.
இது தொல் திருமாவளவனின் தனிப்பட்ட கோரிக்கை அல்ல கட்சியின் தலைமை நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் நாம் பங்கு பெற வேண்டும் தலித் இனத்தவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிமை வேண்டும் எனவே நீங்கள் அமைச்சர் பதவி கேளுங்கள் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.
மேற்படி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழக வெற்றி கழகம் பக்கம் தாவுவதற்கும் தயாராக இருப்பதாக பல முக்கிய நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள்.இதனால் தொல் திருமாவளவன் இருதலைக் கொள்ளி எரும்பாக தவித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகம் பக்கம் கூட்டணி வைத்துக்கொண்டால் இரண்டு அமைச்சர் பதவிகளும் 20 தொகுதிகளும் ஒதுக்கி தரப்படும் என பேச்சுவார்த்தை திரைமறைவில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து விடலாம் என்று தொல் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது இது தொடர்பாக அவசரம் அவசரமாக தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர் பேசி வருகிறார்.
நடிகர் விஜய்யை பொருத்தவரையில் ஏற்கனவே அதிமுக தரப்பில் இருந்து முக்கிய தலைவரான செங்கோட்டையனை தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டதை அடுத்து தொல் திருமாவளவனையும் சேர்த்துக் கொண்டால் கட்சிக்கு மிகப்பெரிய பாப்புலாரிட்டிகிடைக்கும் என கருதுகிறார். அதே வேளையில் திமுகவை முழுக்க முழுக்க எதிர்த்து வரும் சூழ்நிலையில் திமுகவுக்கு தோல்வியும் ஏற்படுத்தலாம் என்று கணக்கு போடுகிறார்.
இதன் நிமித்தமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்கள் கூட்டணியில் சேருமானால் 25 முதல் 30 தொகுதிகள் வரையும் ஒதுக்கி தர விஜய் தயாராக இருக்கிறார் என்பது திரை மறைவு செய்தியாகும். இதனால் எந்த சூழ்நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தமிழக வெற்றி கழகம் முகம் பல்டி அடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *