B. R. Ambedkar: அமெரிக்கவில் சிலை!

அமெரிக்கவில் அம்பேத்கார் சிலை.

அமெரிக்காவில்  19 அடி உயரமான அம்பேத்கார் சிலை அக்டோபர் 14-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

தலித்துகள் உரிமைகளுக்காகப் போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான பாபா சாகேப் டாக்டர் பீமாராவ் அம்பேத்கார் 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார்.அம்பேத்கார் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான முதல் அமைச்சரவையில்  சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராக இருந்தவர்.

இவர் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். அச்சமூக முன்னேற்றத்திற்காகப் பல சட்டங்களை முன்னெடுத்தார். 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர் அம்பேத்கார் காலமானார்.

இந்த நாளைஅவரதுதொண்டர்கள்`தம்மாசக்ராபரிவர்தன்தினம்’எனக்கொண்டாடிவருகிறார்கள்.இந்நிலையில், அமெரிக்காவில் வரும் அக்டோபர் 14 -ஆம் தேதியன்று மேரிலாண்ட் மாகாணத்தில்  அக்கோகீக் பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் அம்பேத்கார் சர்வதேச மையத்தில் சமத்துவத்திற்கான சிலையெனப் பெயரிடப்பட்ட 19 அடி உயர  அம்பேத்கார் சிலை திறக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *