பொங்கல் விழாவில் பங்கேற்ற அமித்ஷா..!

Advertisements

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நம்ம ஊர் மோடி பொங்கல் என்னும் பெயரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
தமிழ்நாடு பாஜக சார்பில் திருச்சிராப்பள்ளியில் நம்ம ஊர் மோடி பொங்கல் என்னும் பெயரில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி தரையில் கோலமிட்டுக் கரும்பு மஞ்சள், இஞ்சி ஆகியவற்றால் அலங்கரித்து மாவிலைத் தோரணங் கட்டி அந்த இடம் விழாக்கோலம் கண்டது.
இதில் கலந்துகொண்ட பாஜக மகளிரணியினர் புதுப்பானையில் பச்சரிசியைப் போட்டுப் பொங்கலிட்டனர். இந்த விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி முழக்கமிட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *