இந்திய கடலோரக் காவல்படைக்குச் சமுத்திரப் பிரதாப்..!

இந்திய கடலோரக் காவல்படைக்குச் சமுத்திரப் பிரதாப் என்கிற கப்பலைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்படைத்துள்ளார்.

இந்தியக் கடலோரக் காவல்படையின் பணியில் சமுத்திரப் பிரதாப் என்கிற கப்பலைச் சேர்க்கும் விழா கோவா கப்பல்கட்டும் தளத்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு சமுத்திரப் பிரதாப் என்கிற கப்பலைக் கடலோரக் காவல்படையின் பணிக்கு ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *